முகப்பு
செய்திகள்

சித்தாவுக்காக நிறைய உழைத்திருக்கிறேன்: சித்தார்த்

சித்தா திரைப்படத்திற்காக நடிப்பில் நிறைய உழைத்திருப்பதாக நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

Updated On : 18 அக்டோபர், 2023 at 10:44 AM
பகிர்:

நடிகர் சித்தார்த், இயக்குநர் மணிரத்னம் படத்தின் மூலம் நடிகரானார். பின்னர் ஷங்கர் இயக்கத்தில் ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சமீபத்தில் ‘டக்கர்’ வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

தற்போது, பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய சு.அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த், ‘சித்தா’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகை நிமிஷா சஜயன் நடித்திருக்கிறார்.

சித்தப்பா உறவினை மையப்படுத்தி உருவாகியுள்ள ‘சித்தா’ வருகிற செப்.28 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய சித்தார்த், “சினிமாவில் 20 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறேன். நான் வெற்றிப் பெற்றனா இல்லையா என்பதை நான்தான்  கூறவேண்டும். சில படங்கள் 10 ஆண்டுகளைக் கடந்து வெளியாகியிருக்கலாம் எனத் தோன்றுகிறது. ஆனால், நிறைவாக இருக்கிறேன். இனி இறக்கும் வரை சினிமாவில்தான் இருப்பேன். இதுவரை கொடுக்காத உழைப்பை சித்தா படத்திற்காக வழங்கியிருக்கிறேன். இதைவிட நல்ல படத்தை எடுக்கத் தெரியாது. எனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் சித்தாவிற்கு செய்துவிட்டேன். அதற்கான அங்கீகாரம் கண்டிப்பாக கிடைக்கும் என நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.