வலிகளுடன் வாழப் பழகிவிட்டேன்: விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி தன் வாழ்க்கை குறித்து மனம் திறந்துள்ளார்.
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி ‘ரத்தம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற அக்.6 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இதன் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில், தன் இளைய மகளுடன் விஜய் ஆண்டனி கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசியபோது ரத்தம் படத்தின் படக்குழுவுக்கு நன்றி தெரிவித்தார்.
இதையும் படிக்க: ஹிட்லர் - விஜய் ஆண்டனியின் புதிய படம் அறிவிப்பு!
Advertisement
Advertisement
பின், அவர் கலந்துகொண்ட நேர்காணல்கள் வெளியாகின. அதில், விஜய் ஆண்டனி, “வாழ்க்கையில் அடுத்தது என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. என் வாழ்வில் நிறைய இழப்புகளை அனுபவித்து விட்டேன். இப்போது, வலிகளுடன் வாழப் பழகிக்கொண்டேன். நான் பெரிய தத்துவவாதி இல்லை. ஆனால், இழப்புகளின் மூலம் நிறையக் கற்றுக்கொண்டேன்” என உருக்கமாகக் கூறியுள்ளார்.
விஜய் ஆண்டனியின் மூத்த மகள் சில நாள்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.