உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!
உதயநிதி கைதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம் நடத்துவது பற்றி...
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவிரி விவகாரம் தொடர்பாக தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் திமுக சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இழிவாகப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் உதயநிதி மீது தவெக மகளிரணியினர், தஞ்சாவூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் அவர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலின் வீட்டுக்கு சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் தலைமையில் போலீசார் இன்று காலை வந்தனர்.
தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக தஞ்சாவூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.
பலத்த பாதுகாப்புடன் போலீஸ் வாகனத்தில் உதயநிதி ஸ்டாலின் அழைத்துச் செல்லப்படும் நிலையில், அவரது வீட்டுக்கு வெளியே கூடியிருந்த திமுகவினர் காவல்துறை வாகனத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து திமுக தொண்டர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையினர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக உதயநிதி ஸ்டாலினை தஞ்சாவூர் அழைத்துச் செல்கின்றனர்.
இதனிடையே உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தேனியில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சென்னை, சேலம், கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Udhayanidhi arrested - DMK protests across Tamil Nadu!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.