பிரபுதேவா பிறந்த நாளில் ‘கோட்’ படத்தின் புதிய போஸ்டர்!
நடிகர் பிரபுதேவா பிறந்த நாளில் கோட் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகர் பிரபுதேவா பிறந்த நாளில் கோட் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடன இயக்குநராக இருந்து பின்னர் இயக்குநராகி தற்போது மீண்டும் நடிப்பில் கலக்கிவரும் பிரபுதேவா கோட் படத்தில் நடித்து வருகிறார்.
லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
Advertisement
Advertisement
இப்படத்திற்கு, கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் (G.O.A.T. - Greatest Of All Times) எனப் பெயரிட்ட அறிவிப்பு போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி, கேரளத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிகழ்ந்தபோது தன் ரசிகர்களை விஜய் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் விடியோக்கள் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் நடிகர் பிரபுதேவா பிறந்தநாளை முன்னிட்டு கோட் படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இயக்குநர் வெங்கர் பிரபு புதிய போஸ்டரை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்துகள் மாஸ்டர். கோட் படக்குழுவின் அன்பு எனப் பதிவிட்டுள்ளார்.
பிரபுதேவா தற்போது ஏ.ஆர். ரஹ்மானுடன் 6வது முறையாக இணைந்து படம் எடுக்கவுள்ளதாக சமீபத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.