பிரேமலு படத்தினைப் பாராட்டிய நயன்தாரா!
பிரேமலு படத்தினை குறித்து நடிகை நயன்தாரா பாராட்டி பதிவிட்டுள்ளார்.
நஸ்லன், மமிதா பைஜு நடிப்பில் உருவான திரைப்படம் பிரேமலு. தண்ணீர்மதன் தினங்கள், சூப்பர் சரண்யா படங்களை இயக்கிய கிரிஷ் ஏடி இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாக உருவான பிரேமலு கடந்த பிப்.9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் இதுவரை உலகளவில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு டப்பிங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் கடந்த ஏப்.12 ஆம் தேதி வெளியாகி, ஓடிடியிலும் நல்ல வரவேற்பினைப் பெற்று வருகிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில் நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பிரேமலு படம் குறித்து பதிவிட்டுள்ளார். அதில், “நல்ல படங்கள் என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது” எனக் கூறியுள்ளார்.
பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட ஒரு கதையை நடிகை நயன்தாராவிடம் இயக்குநர் சசிகுமார் கூறியதாகவும் அது பிடித்ததால் நயன்தாரா நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
டெஸ்ட் படத்தின் படப்பிடிப்பை முடித்த நயன்தாரா தற்போது மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.