முகப்பு
செய்திகள்

ரத்னம் படத்தின் தணிக்கைச் சான்றிதழ்!

நடிகர் விஷால் நடிப்பில் வெளியாகியுள்ள ரத்னம் படத்தின் தணிக்கைச் சான்றிதழ் வெளியாகியுள்ளது.

Updated On : 17 ஏப்ரல் 2024, 4:32 pm IST
பகிர்:

‘மார்க் ஆண்டனி’  படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஷால் நடித்துள்ள திரைப்படம் ரத்னம். இந்த படத்தை இயக்குநர் ஹரி இயக்குகிறார்.

தாமிரபரணி, பூஜை படங்களுக்குப் பிறகு இருவரும் இணையும் மூன்றாவது படம் இது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

மேலும், இப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். படத்தை ஜீ ஸ்டூடியோஸ் சவுத் மற்றும் கார்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

Advertisement

Advertisement

ரத்னம் திரைப்படம் ஏப்ரல் 26 அன்று திரைக்கு வரும் இப்படத்தின் 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது.

சமீபத்தில் ரத்னம் படத்தின் டிரைலர் வெளியாகி, இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

இந்நிலையில், படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 45 நிமிடம் இருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.