கவனம் ஈர்க்கும் எலக்சன் படத்தின் முதல் பாடல்!
உறியடி குமார் நடிக்கும் எலக்சன் படத்தின் முதல் பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
'உறியடி', 'ஃபைட் கிளப்' ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடையே கவனம் பெற்றவர் நடிகர் விஜய்குமார்.
வசன கர்த்தா, இயக்குநர், நடிகர் என பன் முகங்களைக் கொண்ட இவர் நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் 'எலக்சன்'. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது.
'சேத்துமான்' படத்தை இயக்கிய தமிழ் எழுதி, இயக்கும் இப்படத்தை ப்ரீத்தி அஸ்ரானி, ரிச்சா ஜோஜி நாயகிகளாக நடிக்கின்றனர். இப்படத்துக்கு கோவிந்த் வசந்த் இசையமைக்கிறார். ரீல் குட் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில், எலக்சன் படத்தின் முதல் பாடலான எலக்சன் பாடல் வெளியாகி, இணையத்தில் வைரலாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.