1 கோடி பார்வைகளைக் கடந்த இனிமேல்!
லோகேஷ் கனகராஜ் - ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான இனிமேல் பாடல் கவனம் பெற்றுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் வெற்றிக்குப் பின் நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து படம் இயக்கவுள்ளார். ரஜினி - 171 படமாக இது உருவாக உள்ளது. இதற்கான திரைக்கதை வேலைகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். படத்திற்கு கூலி எனப் பெயரிட்டுள்ளனர்.
இதற்கிடையே, ’இனிமேல்’ என்கிற நடிகை ஸ்ருதி ஹாசனின் ஆல்பம் பாடலில் லோகேஷ் கனகராஜ் நடித்தார்.
ராஜ்கமல் தயாரிப்பில் நடிகர் கமல்ஹாசன் வரிகளில் நடிகை ஸ்ருதிஹாசன் இசையமைத்து இயக்கியுள்ள இந்த பாடலில் லோகேஷுடன் ஸ்ருதிஹாசனும் இணைந்து நடித்திருந்தார்.
Advertisement
Advertisement
ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற இப்பாடல் தற்போது, யூடியூபில் 1 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.