FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தக் லைஃப் படப்பிடிப்பில் சிம்பு!

தக் லைஃப் படப்பிடிப்பு தில்லியில் நடைபெற்று வருகிறது.

23 ஏப்ரல் 2024, 12:21 pm IST
பகிர்:

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான 'நாயகன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைகிறது.

தக் லைஃப் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன.

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்டம் செர்பியாவிலும் நடைபெற்றது. செர்பியாவில் நடந்த படப்பிடிப்பில் கமல், த்ரிஷா கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

இதற்கிடையே, துல்கர் சல்மான் தனது அடுத்த படத்தில் நடிக்க இருப்பதால், அதிக நாள்கள் தக் லைஃப் படத்துக்கு தர முடியாத காரணத்தால் விலகியதாக தகவல்கள் வெளியாகின.

துல்கர் சல்மானுக்கு பதிலாக நடிகர் சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், துல்கர் சல்மான் தக் லைஃப் படத்தில் மீண்டும் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தில்லியில் நடைபெற்று வருகிறது. இதில், சிம்புவுக்கான சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகத் தகவல். சிம்புவுடன் நடிகர் கமல்ஹாசனும் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments