ரத்னம் மேக்கிங் விடியோ!
ரத்னம் படத்தின் சண்டைக் காட்சி மேக்கிங் விடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
‘மார்க் ஆண்டனி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஷால் நடித்துள்ள திரைப்படம் ரத்னம். இந்தப் படத்தை இயக்குநர் ஹரி இயக்கியுள்ளார்.
தாமிரபரணி, பூஜை படங்களுக்குப் பிறகு இருவரும் இணையும் மூன்றாவது படம் இது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
நடிகர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். படத்தை ஜீ ஸ்டூடியோஸ் சவுத் மற்றும் கார்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
Advertisement
Advertisement
ரத்னம் திரைப்படம் நாளை (ஏப்ரல் 26) திரைக்கு வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் சண்டைக் காட்சி ஒன்றின் மேக்கிங் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.