✕
முகப்பு

திண்டுக்கல் லியோனி மகனின் டெலிவரி பாய் படத்தின் கதாபாத்திர அறிமுக விடியோ!

டெலிவரி பாய் படத்தின் கதாபாத்திர அறிமுக விடியோ குறித்து...

டெலிவரி பாய் போஸ்டர். - படம்: விடியோ கிளிப்
பகிர்:

திண்டுக்கல் லியோனி மகனின் டெலிவரி பாய் படத்தின் கதாபாத்திர அறிமுக விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘டெலிவரி பாய்’. இயக்குநர் நானி எழுதி இயக்கியுள்ள இப்படத்தை, அசாசி கிரியேஷன்ஸ் சார்பில் அமுதா லியோனி தயாரித்துள்ளார்.

ஒரு சாதாரண டெலிவரி பாயின் வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத சம்பவங்கள் அவனை எந்தப் பாதைக்கு அழைத்துச் செல்கின்றன என்பதை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

படத்தில் லியோ சிவக்குமாருக்கு ஜோடியாக பிரிகிடா சாகா நடித்துள்ளார். ராதிகா சரத்குமார், லியோ சிவக்குமாரின் தாயாக முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் காளி வெங்கட், போஸ் வெங்கட், ஜென்சன் திவாகர், துஷ்யந்த், உதயா தீப் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

சாண்டி டாக்கீஸ் சார்பில் லெனின் மாதேஸ்வரன் தயாரிப்பில் இந்தப் படத்திற்கு சுந்தரமூர்த்தி கே.எஸ். இசையமைத்துள்ளார். இந்தப் திரைப்படம் நவ. 27 ஆம் தேதி வெளியாகிறது.

இந்த நிலையில், டெலிவரி பாய் படத்தின் கதாபாத்திர அறிமுக விடியோ படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

summary

The film crew has released a character introduction video for the movie 'Delivery Boy', featuring the son of Dindigul Leoni.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.