திண்டுக்கல் லியோனி மகனின் டெலிவரி பாய் பட வெளியீடு ஒத்திவைப்பு!
டெலிவரி பாய் பட வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது தொடர்பாக...
திண்டுக்கல் லியோனி மகனின் டெலிவரி பாய் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘டெலிவரி பாய்’. இயக்குநர் நானி எழுதி இயக்கியுள்ள இப்படத்தை, அசாசி கிரியேஷன்ஸ் சார்பில் அமுதா லியோனி தயாரித்துள்ளார்.
ஒரு சாதாரண டெலிவரி பாயின் வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத சம்பவங்கள் அவனை எந்தப் பாதைக்கு அழைத்துச் செல்கின்றன என்பதை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
படத்தில் லியோ சிவக்குமாருக்கு ஜோடியாக பிரிகிடா சாகா நடித்துள்ளார். ராதிகா சரத்குமார், லியோ சிவக்குமாரின் தாயாக முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் காளி வெங்கட், போஸ் வெங்கட், ஜென்சன் திவாகர், துஷ்யந்த், உதயா தீப் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
சாண்டி டாக்கீஸ் சார்பில் லெனின் மாதேஸ்வரன் தயாரிப்பில் இந்தப் படத்திற்கு சுந்தரமூர்த்தி கே.எஸ். இசையமைத்துள்ளார்.
இந்தப் படம் அக்டோபர் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகயிருந்த நிலையில், ரஜினிகாந்தின் ஜெயிலர் - 2 திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால், டெலிவர் பாய் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், டெலிவரி பாய் திரைப்படத்தின் வெளியீடு, நவ. 27 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
It has been officially announced that the release of Dindigul Leone's son's film Delivery Boy has been postponed.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.