விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!
இந்த வாரம் திரையரங்குகளில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காண்போம்.
வாரந்தோறும் திரையரங்குகளில் புதுப்புது திரைப்படங்கள் வெளியாகி கொண்டுதான் இருக்கின்றன. தங்களது விருப்ப நடிகரின் திரைப்படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு திரையரங்கங்களுக்கு சென்று கொண்டுதான் இருக்கிறார்கள்.
அந்தவகையில், இந்த வாரம் திரையரங்குகளில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காண்போம்.
'ரத்னம்' திரைப்படம் நாளை (ஏப்ரல் 26) திரைக்கு வருகிறது. தாமிரபரணி, பூஜை படங்களுக்குப் பிறகு இயக்குநர் ஹரி - விஷால் இணையும் மூன்றாவது படம் இது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.
Advertisement
Advertisement
தமன்குமார் நாயகனாக நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம் 'ஒரு நொடி'. இப்படத்தில் எம்.எஸ். பாஸ்கர் பிரதான வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் ஏப். 26-ல் வெளியாகிறது.
எஸ். சசிகுமார் இயக்கியுள்ள 'இங்கு மிருகங்கள் வாழும் இடம்', யுவன் பிரபாகரனின் 'கொலைதூரம்' திரைப்படங்கள் ஏப்ரல் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
'பவி கேர்டேக்கர்' என்ற மலையாளப்படமும், 'லேட் நைட் வித் டெவில்' மற்றும் 'சேலஞ்சர்ஸ்' என்ற ஹாலிவுட் படங்கள் நாளை(ஏப். 26) வெளியாகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.