முகப்பு

வாட்டர் பாக்கெட் பாடல் விடியோ !

5 ஆகஸ்ட் 2024, 6:36 pm
வாட்டர் பாக்கெட் பாடல் விடியோ !
நடிகர்கள் சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி.
பகிர்:

ராயன் திரைப்படத்தின் வாட்டர் பாக்கெட் பாடலின் விடியோ வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான ராயன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்தது.

வடசென்னையில் தன் தம்பிகள் மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வரும் ராயன் (தனுஷ்) எதிர்கொள்ளும் பிரச்னைகளும் திருப்பங்களுமாக உருவான இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் படத்தில் இடம்பெற்ற வாட்டர் பாக்கெட் பாடலின் காட்சிகள் பெரிதாக ரசிக்க வைத்தது.

Advertisement

Advertisement

நடிகர்கள் சந்தீப் கிஷனுக்கும் அபர்ணா பாலமுரளிக்கும் இடையான காதல் காட்சிக்காக இப்பாடல் பயன்படுத்தப்பட்டிருந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இதனை, கானா காதர் என்பவர் எழுதியிருக்கிறார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் ஸ்வேதா மோகன் இணைந்து பாடியுள்ளனர்.

இப்பாடலின் விடியோவை எப்போது வெளியிடுவார்கள் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், தயாரிப்பு நிறுவனம் இப்பாடல் விடியோவை வெளியிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.