உடற்பயிற்சி செய்யும் ஜோதிகா.  படங்கள்: இன்ஸ்டா/ ஜோதிகா
செய்திகள்

சுதந்திர நாளில் ஜோதிகாவின் அறிவுரை இதுதான்..!

நடிகை ஜோதிகா தான் உடற்பயிற்சி செய்யும் விடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

DIN

தமிழில் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்போது தமிழ், மலையாளம், ஹிந்தியில் நடித்து வருகிறார்.

ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான காதல் தி கோர் என்ற மலையாளத் திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பினைப் பெற்றது.

ஹிந்தியில் மாதவன், அஜய் தேவ்கன் உடன் ஜோதிகா நடிப்பில் வெளியான ‘சைத்தான்’ திரைப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியது. மேலும் ஹிந்தியில் ஒரு இணையத்தொடர் ஒன்றிலும் நடித்து வருகிறார்

2006-ஆம் ஆண்டு ஜோதிகாவும் சூர்யாவும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு தியா (17) மகளும், தேவ் (14) என்ற மகனும் இருக்கிறார்கள்.

திருமணத்துக்குப் பிறகு உடல் எடை கூடிய ஜோதிகா தற்போது கடுமையாக உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

சுதந்திர நாள் விழாவன்று உடற்பயிற்சி செய்யும் விடியோவை பதிவிட்டு, “இந்த சுதந்திர நாளிலிருந்து உண்மையாகவே தற்சார்புடையவராக மாறுவோம்” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

14,000 டி20 ரன்களை கடந்த முதல் இங்கிலாந்து வீரராக அலெக்ஸ் ஹேல்ஸ் சாதனை!

டிராகனும், யானையும் இணைய வேண்டும்: மோடியிடம் பேசிய சீன அதிபர்!

பெனால்டியில் வென்றுகொடுத்த ப்ரூனோ..! யுனைடெட் அணிக்கு முதல் வெற்றி!

தெருநாய்களுக்கு நன்றியுள்ளவராக இருப்பேன்: நீதிபதி நகைச்சுவை

ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்த மோகன்லால்!

SCROLL FOR NEXT