FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வெற்றிக்குத் தகுதியானவர் ஜேசன் சஞ்சய்: ஜோதிகா

ஜேசன் சஞ்சய்யை வாழ்த்திய ஜோதிகா...

ஜேசன் சஞ்சய், ஜோதிகா
பகிர்:

நடிகை ஜோதிகா இயக்குநர் ஜேசன் சஞ்சய்யை வாழ்த்தி பதிவிட்டுள்ளார்.

லைகா தயாரிப்பில் இயக்குநராக அறிமுகமாகும் முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்யின் சிக்மா படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாகவும் ஃபரியா அப்துல்லா நாயகியாக நடித்துள்ளனர்.

தமன் இசையமைப்பில் ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமாக உருவான இது நாளை (அக். 2) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நடிகை ஜோதிகா ஜேசன் சஞ்சய்யை வாழ்த்தி பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சிக்மா படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஜேசன் சஞ்சய்யின் நேர்காணலைப் பார்க்கும் போது பக்குவமான, அமைதியான மற்றும் இயல்பான இளைஞராக மகிழ்ச்சியைத் தருகிறார். நீங்கள் வளர்ந்திருப்பதைப் பார்க்கும்போது, உங்களுக்கு கிடைக்கவுள்ள வெற்றிக்குத் தகுதியானவர் எனத் தோன்றுகிறது.

உங்கள் பெற்றோருக்கு சிறந்த மகனாக இருக்கும் உங்களையும், படக்குழுவினரையும் வாழ்த்துகிறேன். உங்களின் 'சிக்மா' திரைப்படத்தின் வெளியீடு சிறப்பாக அமையட்டும். கடவுள் எப்போதும் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

Actress Jyothika has posted a message congratulating director Jason Sanjay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments