மீண்டும் பிறந்தாலும் நீயே வேண்டும்... மனைவியை வாழ்த்திய விக்னேஷ் சிவன்!
நயன்தாரா பிறந்த நாளுக்கு விக்னேஷ் சிவன் வாழ்த்து...
இயக்குநர் விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாராவை வாழ்த்திப் பதிவிட்டுள்ளார்.
நடிகை நயன்தாரா இன்று தன் 42-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்துவரும் நடிகை என்பதால் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தமிழ் மட்டுமல்லாது இந்திய அளவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார்.
Advertisement
Advertisement
இந்தப் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இவர் நடிகர் ரஜினிகாந்த்துடன் நடித்து வரும் தர்மன் திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இயக்குநரும் நயனின் கணவருமான விக்னேஷ் சிவன் சில புகைப்படங்களைப் பகிர்ந்து, “மீண்டும் பிறந்தாலும் நீயே வேண்டும். என் உயிர் உலகமே... என் தங்கமே... லவ் யூ” எனப் பிறந்த நாள் வாழ்த்தைப் பகிர்ந்துள்ளார்.