FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நயன்தாரா மகன்கள் உயிர் உலக்... குவியும் வாழ்த்து!

நயன்தாரா மகன்களுக்கு குவியும் வாழ்த்துச் செய்தி தொடர்பாக...

விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியின் மகன்கள் உயிர், உலக் - படம்: எக்ஸ்
பகிர்:

விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியின் மகன்கள் உயிர், உலக் பிறந்த நாளுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம், விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தார். இவை இரண்டும் நல்ல விமர்சனங்களையே பெற்றிருந்தன.

அண்மையில், நடிகர் பிரதீப் ரங்கநாதனை வைத்து எல்ஐகே திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்தப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது.

Advertisement

Advertisement

நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான ஹாய் மற்றும் டாக்ஸிக் திரைப்படங்கள், பெரிதாக ரசிகர்களைக் கவரவில்லை என்றே கூறப்படுகிறது. இவர், தற்போது மூக்குத்தி அம்மன் -2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்

இதனிடையே, விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் திருமணம் 2022, ஜூன்  9 ஆம் தேதி மாமல்லபுரத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இவர்களுக்கு உயிர் உலக் என்ற இரட்டைக் குழந்தைகள் உள்ளனர்.

விக்னேஷ் சிவன் - நயன்தாரா மகன்களின் 4வது பிறந்த நாள் விழா நேற்று(செப். 27) கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் எடுத்த புகைப்படங்களை நயன்தாரா தன்னுடைய சமூக ஊடகங்களில் வெளியிட்டு இருந்தார்.

இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதுடன், ரசிகர்கள், திரை பிரபலங்கள் பலரும் உயிர், உலகிற்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

summary

Many people are extending their wishes for the birthdays of Uyir and Ulag, the sons of the Vignesh Shivan Nayanthara couple.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments