FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தமிழகத்தில் மது விற்பனை அதிகம்; வெட்கப்பட வேண்டிய விஷயம்: அமைச்சர் விக்னேஷ்

தமிழகத்தில் மது விற்பனை அதிகமாகிறது என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம் என அமைச்சர் விக்னேஷ் பேசியது குறித்து...

அமைச்சர் விக்னேஷ். - கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் மது விற்பனை அதிகமாகிறது என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம் என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் செவ்வாய்க்கிழமை (நவ. 10) தெரிவித்தார்.

தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும் கடந்த நவ.7,8-ஆகிய தேதிகளில் ரூ. 441 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையானது.

இதுகுறித்து அமைச்சர் விக்னேஷ் பேசியதாவது:

Advertisement

Advertisement

டாஸ்மாக் வருமானத்தை செய்திகளில் பெரிதாக போடுவதால் மக்களுக்கு என்ன பயன் இருக்கிறது? இதுமாதிரியான விஷயங்களுக்கெல்லாம் முக்கியத்துவம் தராதீர்கள்.

எங்களுடைய நோக்கம் என்பது 234 தொகுதிகளிலும் போதை மறுவாழ்வு மையங்களைக் கொண்டுவருவதுதான். மது விற்பனை அதிகமாகிறது என்பது நாம் வெட்கப்பட வேண்டிய விஷயம்.

எனவே, வரும் காலங்களில் உளவியல் ரீதியாக மக்களுக்கு எடுத்துச் சொல்லி மதுவால் விளையும் தீமைகளைல் சொல்லி இதை கட்டுப்படுத்த வேண்டும். தீபாவளி அன்று க்யூஆர் கோட் வேலை செய்ய வில்லை என்ற புகார்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விக்னேஷ் குறிப்பிட்டுள்ளார்.

summary

Minister for Prohibition and Excise Vignesh stated on Tuesday (Nov. 10) that the high volume of liquor sales in Tamil Nadu is a matter of shame.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.