முகப்பு
செய்திகள்

கோட் டிரைலர்... நடிகர் அஜித் சொன்ன கருத்து!

Updated On : 17 ஆகஸ்ட் 2024, 9:46 pm IST
பகிர்:

கோட் டிரைலர் குறித்து நடிகர் அஜித் கூறியதை இயக்குநர் வெங்கட் பிரபு பகிர்ந்துள்ளார்.

விஜய்யின் 68-வது படமான `கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. - Greatest Of All Times) படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.

நடிகர் விஜய் - இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. நடிகர் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

Advertisement

Advertisement

இப்படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர். ஆக்சன், டீஏஜிங் காட்சிகள் படத்தின் மீதான ஆவலை அதிகரித்துள்ளது.

டிரைலர் வெளியீட்டு நிகழ்வில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இயக்குநர் வெங்கட் பிரபு, “அஜித் சாருக்கு கோட் படத்தின் டிரைலரை அனுப்பி வைத்தேன். அதைப் பார்த்துவிட்டு அருமையாக இருக்கிறது என்றதுடன் நடிகர் விஜய் மற்றும் படக்குழுவினருக்கு என் வாழ்த்துகளைப் கூறுங்கள்” என தெரிவித்ததைப் பகிர்ந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments