முகப்பு
செய்திகள்

பிரமிப்பைத் தரும் தங்கலான் மேக்கிங் விடியோ!

Updated On : 18 ஆகஸ்ட் 2024, 12:53 pm IST
பகிர்:

தங்கலான் திரைப்படத்தின் மேக்கிங் விடியோவை வெளியிட்டுள்ளனர்.

நடிகர் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம் வியாழக்கிழமை (ஆக.15) திரையரங்குகளில் வெளியாகியது. .

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான் படத்தில் நாயகனாக விக்ரம் நடித்திருக்கிறார். இரண்டு ஆண்டுகளாக தயாரிப்பிலிருந்த இப்படம் உலகளவில் வெளியாகி்யுள்ளது.

Advertisement

Advertisement

விக்ரம்

கோலார் தங்கச் சுரங்கம், தங்கத்துக்கு யார் சொந்தக்காரர்கள் என்று பூர்வகுடிகளின் கதைகளப் பற்றி பேசியுள்ளது தங்கலான்.

இந்தப் படத்தில் பசுபதி,  மாளவிகா மோகனன், பார்வதி நடித்துள்ளார்கள்.கலவையான விமர்சனங்களைப் பெறும் தங்கலான் இதுவரை உலகளவில் ரூ.53.6 கோடி வரை வசூலித்துள்ளதாகக் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.

நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் பா. இரஞ்சித்.

இப்படத்தில் நடிகர்களின் உழைப்பும் படத்தின் உருவாக்கமும் அதிகமும் பேசப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தங்கலான் மேக்கிங் விடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

18 ஆம் நூற்றாண்டு கால செட் அமைப்புகள், சண்டைக்காட்சிகள் எடுக்கப்பட்ட விதம் பிரமிப்பைத் தருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments