சர்தார் 2 படப்பிடிப்புக்காக சென்னை வந்தடைந்த மாளவிகா!
நடிகை மாளவிகா மோகனன் சர்தார் 2 படப்பிடிப்புக்காக சென்னை வந்தடைந்தார்.
பிரபலமான ஈரான் இயக்குநர் மஜித் மஜித்தின் இயக்கத்தில் 2017இல் வெளியான பியாண்ட் தி கிளவுட்ஸ் எனும் ஹிந்தி படத்தில் மாளவிகா நாயகியாக அறிமுகமானார்.
தமிழில் நடிகர் ரஜினியின் பேட்ட, விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். தற்போது, பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
மலையாளத்தில் வெளியான கிறிஸ்டி திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது. பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
Advertisement
Advertisement
தங்கலான் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள மாளவிகாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிட்டத்தக்கது.
தங்கலானுக்குப் பிறகு முதன்முறையாக தெலுங்கில் அறிமுகமாவிருக்கிறார்.
இயக்குநர் மருதி இயக்கும் தி ராஜா சாப் படத்தில் நடிகர் பிரபாஸுடன் நடிக்கிறார்.
தற்போது தமிழில் சர்தார்2 படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்புக்காக சென்னை வந்தடைந்துள்ளார்.
இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான சர்தார் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இதன் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது.
பிரின்ஸ் ஃபிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் இசையமைக்கிறார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.