FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன்!

Updated On : 27 ஆகஸ்ட் 2024, 4:16 pm IST
பகிர்:

இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சண்முக பாண்டியன் நடிக்க உள்ளார்.

இயக்குநர் பொன்ராம் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா படங்களை இயக்கி வெற்றி பெற்றவர். ஆனால், இறுதியாக இயக்கிய டிஎஸ்பி திரைப்படம் பெரிய தோல்விப்படமானது.

இதனால், பொன்ராம் படத்தில் நடிக்க பெரிய இயக்குநர்கள் தயங்கினர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியனை வைத்து புதிய படத்தை பொன்ராம் இயக்க உள்ளார். முகேஷ் செல்லைய்யா படத்தை தயாரிக்கிறார்.

கிராமப் பின்னணியில் உருவாகும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடிக்கிறார். விஜயகாந்த்துடன் நடிகர் சரத்குமார் இணைந்து நடித்த புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் உள்ளிட்ட படங்கள் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments