FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

பிக் பாஸ் 8: தகுதி இல்லாத போட்டியாளர் யார்? சிறைக்குச் சென்ற ஜாக்குலின்!

பிக் பாஸ் வீட்டில் விதிக்கப்பட்ட டெவிலும் ஏஞ்சலும் டாஸ்க்கை விளையாட தகுதியே இல்லாத நபர் யார் என்பதைத் தேர்வு செய்தனர்.

Updated On : 4 டிசம்பர் 2024, 6:13 pm IST
செளந்தர்யா, ஜாக்குலின் - படம் | எக்ஸ்
பகிர்:

பிக் பாஸ் வீட்டில் விதிக்கப்பட்ட டெவிலும் ஏஞ்சலும் டாஸ்க்கை விளையாட தகுதியே இல்லாத நபர் யார் என்பதைத் தேர்வு செய்தனர்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 9வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்தில் பாடகர் ஜெஃப்ரி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த வாரத்தின் மூன்றாவது நாளான இன்று (டிச. 4) டெவிலும் ஏஞ்சலும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதில் பிக் பாஸ் வீட்டில் யாருடனும் சண்டையிடாத 8 பேர் ஏஞ்சல்களாகவும், எதற்கெடுத்தாலும் வாதிட்டு சண்டையிடும் போட்டியாளர்கள் டெவில்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

ஏஞ்சல் அணியில் ரஞ்சித், வி.ஜே. விஷால், அன்ஷிதா, ஆர்.ஜே. ஆனந்தி, பவித்ரா ஜனனி, ஜெஃப்ரி, ரயான் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். டெவில்களாக செளந்தர்யா, ஜாக்குலின், முத்துக்குமரன், ராணவ், சாச்சனா, மஞ்சரி, தர்ஷிகா, தீபக், அருண் பிரசாத் உள்ளிட்டோர் உள்ளனர்.

டெவில்களின் வேலை, ஏஞ்சல்களை பொறுமை இழக்கச் செய்து, அவர்களிடம் இருந்து ஸ்டார்களைப் பெறவேண்டும். ஏஞ்சல்கள், தங்களுக்கு எவ்வளவு இன்னல்கள் வந்தாலும் அமைதி காக்க வேண்டும்.

இதில், போட்டியாளர்கள் மத்தியில் கடும் சச்சரவு நிலவியது. ஏஞ்சல்களாக இருப்பவர்களை சோதிக்கும் வகையில் முட்டையை குடிக்கச் சொல்வது, குப்பையை சாப்பிடக் கொடுப்பது போன்ற இரக்கமற்ற செயல்களில் சாச்சனா, மஞ்சரி உள்ளிட்டோர் ஈடுபட்டனர். இதில் பவித்ரா உள்ளிட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், டெவில் ஆக இருக்கத் தகுதியே இல்லாத போட்டியாளர் யார் என்பதை தேர்வு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை பிக் பாஸ் விதித்தார்.

இதில் பிக் பாஸ் வீட்டில் இருந்த போட்டியாளர்கள் மஞ்சரியையும், ஜாக்குலினையும் தேர்வு செய்தனர். இவர்கள் இருவரில் ஜாக்குலினுக்கு அதிக எண்ணிக்கையிலான நபர்கள் தேர்வு செய்ததால் ஜாக்குலின் சிறைக்கு அனுப்பப்பட்டார். மறு அறிவிப்பு வரும்வரை ஜாக்குலின் சிறையில் இருக்க வேண்டும் என பிக் பாஸ் அறிவித்துள்ளார்.

பிக் பாஸ் விதிகளை மீறி நடந்துகொண்டதாக ஜாக்குலின் மீது பலரும் குற்றம் சாட்டினர்.

இதையும் படிக்க | ஏஞ்சல் vs டெவில்!! தரக்குறைவான செயல்களில் பிக் பாஸ் போட்டியாளர்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments