த்ரிஷ்யம் - 3! உறுதிசெய்த மோகன்லால்!
த்ரிஷ்யம் - 3 குறித்து...
நடிகர் மோகன்லால் த்ரிஷ்யம் - 3 படம் குறித்து பேசியுள்ளார்.
இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் திரில்லர் வகையில் உருவான ‘த்ரிஷ்யம்’ , ‘த்ரிஷ்யம் 2’ ஆகிய திரைப்படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அப்படத்தின் 3 ஆம் பாகம் குறித்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
முதல் பாகம் அளவிற்கு இரண்டாம் பாகம் இல்லையென்றாலும் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பும் நீதிமன்றக் காட்சியும் படத்தை வெற்றியடையச் செய்தன.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: பிரபல இயக்குநர் ஷியாம் பெனகல் காலமானார்!
தொடர்ந்து, இந்தப் படத்தின் 3-வது பாகம் உருவாகும் என இயக்குநர் ஜீத்து ஜோசஃப் தெரிவித்திருந்தார். 2025 ஆம் ஆண்டு த்ரிஷ்யம் - 3 படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாகவும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியானது.
இந்த நிலையில், நடிகர் மோகன்லால் நேர்காணல் ஒன்றில் த்ரிஷ்யம் - 3 படத்தின் பணிகளைத் துவங்க இருப்பதாகக் கூறியுள்ளார். பான் இந்திய அளவில் உருவாக உள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.
மோகன்லால் இயக்கிய முதல் திரைப்படமான, ‘பரோஸ்’ நாளை (டிச. 25) திரையரங்குகளில் வெளியாகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.