பாதல் லோக் சீசன் - 2 வெளியீட்டுத் தேதி!
பாதல் லோக் தொடரின் இரண்டாவது சீசன் வெளியீடு குறித்து...
பிரபல இணையத் தொடரான பாதல் லோக்கின் இரண்டாவது சீசன் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளனர்.
அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான இணையத் தொடர் பாதல் லோக் (paatal lok). இயக்குநர்கள் அவினாஷ் அருண், ப்ரோசித் ராய் இயக்கத்தில் உருவான இத்தொடரில் ஒரு பத்திரிகையாளரின் பார்வையிலிருந்து கொலைகளும், அதன் பின்னணிகளும் விரிவாக அலசப்பட்டிருக்கும்.
இந்தியளவில் இதுவரை வெளியான தொடர்களில் பாதல் லோக் தனித்துவமான இடத்தையே பெற்றிருக்கிறது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: உண்மை சம்பவத்தைப் படமாக்கும் ராஜ்குமார் பெரியசாமி?
நடிகர்கள் ஜெய்தீப் அலாவத், அபிஷேக் பானர்ஜி, நீரஜ் கபி உள்ளிட்டோர் நடிப்பில் கிரைம், திரில்லர் பாணியில் இத்தொடர் உருவாகியிருந்தது.
முதல் சீசனில் ஒரு திருப்பத்துடன் தொடர் நிறைவடைந்ததால் அதன் இரண்டாம் பாகம் குறித்து பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இதனால், அதற்கான படப்பிடிப்புகள் சில மாதங்களாக நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், அவினாஷ் அருண் இயக்கிய பாதல் லோக் தொடரின் இரண்டாவது சீசன் அடுத்தாண்டு ஜனவரி 17 ஆம் தேதி வெளியாகும் என அமேசான் பிரைம் அறிவித்துள்ளது.