சொகுசு விடுதி நிகழ்ச்சியில் ஒன்றுகூடி புகைப்படம் எடுத்துக்கொண்ட எதிர்நீச்சல் நடிகர்கள் 
செய்திகள்

எதிர்நீச்சல் நடிகர்களின் ஒருநாள் பயணம்!

எதிர்நீச்சல் தொடரில் நடித்துவரும் நடிகை, நடிகர்கள் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் பயணங்கள் செய்வது வாடிக்கையாகிவிட்டது.

DIN

எதிர்நீச்சல் தொடரில் நடித்துவரும் நடிகை, நடிகர்கள் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் பயணங்கள் செய்வது வாடிக்கையாகிவிட்டது. இது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ரசிகர்களுடனும் பகிர்ந்துகொள்வார்கள்.

அந்தவகையில் எதிர்நீச்சல் நாயகி மதுமிதா, சக நடிகர், நடிகைகளுடன் பார்டி சென்று பகிர்ந்துள்ள படத்திற்கு ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். 

தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எதிர்நீச்சல் நடிகைகள் மதுமிதா, ஹரிபிரியா இசை, பிரியதர்ஷினி, சத்தியப்பிரியா, காயத்ரி கிருஷ்ணன், சத்யா தேவராஜன், நடிகர்கள் கமலேஷ், சபரி பிரசாந்த், விபூ ராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

சொகுசு விடுதி நிகழ்ச்சியில் எதிர்நீச்சல் நடிகர்கள்

நிகழ்ச்சிக்கு வந்த அவர்கள் குழுவாக புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படத்தை நடிகை மதுமிதா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். 

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு எதிர்நீச்சல் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடர் அதிக அளவு மக்களைக் கவர்ந்துள்ளதால், டிஆர்பி பட்டியலிலும் தொடர்ந்து முதல் 5 இடங்களில் ஒன்றாக நீடித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT