பேபி ஜான் புதிய போஸ்டர்!
அட்லி தயாரிக்கும் பேபி ஜான் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குநர் ஷங்கரின் துணை இயக்குநராக இருந்து தனது முதல் படமான ‘ராஜா ராணி’ மூலம் பிரபலமானவர் இயக்குநர் அட்லி. அடுத்து நடிகர் விஜய்யுடன் தொடர்ச்சியாக ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தார். பின்னர் பாலிவுட்டில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தினை இயக்கினார்.
ஜவான் திரைப்படம் ரூ.1140 கோடி வசூலித்து சாதனைப் படைத்தது. அடுத்து ரூ.3000 கோடி வசூலிக்கும் படத்தினை இயக்க உள்ளதாகவும் நடிகர்கள் விஜய், ஷாருக்கானை வைத்து படமெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
தற்போது, அட்லி தன் தயாரிப்பு நிறுவனமான ‘ஏ ஃபார் ஆப்பிள்’ மூலம் ஹிந்தியில் தெறி படத்தை ரீமேக் செய்து வருகிறார்.
Advertisement
இதையும் படிக்க: லவ்வர் படம் அர்ஜுன் ரெட்டி மாதிரியா?: நடிகர் மணிகண்டன் விளக்கம்!
வருண் தவான் நாயகனாக நடிக்கும் இப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பின் விடியோவைப் படக்குழு பகிர்ந்திருந்தது. பிரியா அட்லி தயாரிக்கும் இப்படத்தில் நாயகிகளாக கீர்த்தி சுரேஷ், வாமிகா கேபி நடிக்க உள்ளனர். இதனை காளிஸ் இயக்குகிறார்.
இப்படத்திற்கு ‘பேபி ஜான்’ எனப் பெயரிட்டுள்ளனர். இந்தப் படம் வருகிற மே 31 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில், படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.