பிக்பாஸ் ஆரியுடன் நடிகை லட்சுமி மேனன் !
நடிகை லட்சுமி மேனன் உடன் இணைந்து நடிக்கிறார் நடிகர் ஆரி அர்ஜுனன்.
நெடுஞ்சாலை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் ஆரி. பின்னர் பிக்பாஸில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்.
பிக்பாஸ் பிரபலம் ஆரி 2020இல் தனது பெயரை ஆரி அர்ஜுனன் என்று மாற்றியிருப்பதாக தெரிவித்திருந்தார்.
உதயநிதியுடன் நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான சேரனின் பயணங்கள் எனும் இணையத் தொடர் வெற்றி பெற்ற பிறகு புதிய படத்தில் நடிகை லக்ஷ்மி மேனனுடன் இணைந்துள்ளார்.
நடிகை லட்சுமி மேனன் இறுதியாக நடித்த சந்திரமுகி 2 மோசமான விமர்சனங்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: சிம்பு 48 படத்தில் மிருணாள் தாக்குர்?
தனது சமூக வலைதள பக்கத்தில், “சேரன் பயணங்கள் வெற்றிக்குப் பிறகு லக்ஷ்மி மேனனுடன் இணைந்துள்ளேன். மெட்ராஸ் டெக் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிட் தயாரிக்கும் முதல் படம். இயக்குநர் ராஜசேகரபாண்டியன் இயக்குகிறார். உங்களது அன்பினையும் ஆதரவினையும் வேண்டிக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.