செய்திகள்

எதிர்நீச்சல் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

எதிர்நீச்சல் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இத்தொடரை இல்லத்தரசிகள் மட்டுமில்லாமல், இளம் வயதினரும் அதிகம் விரும்பி பார்க்கின்றனர்.

டிஆர்பியில் பட்டியலில் எதிர்நீச்சல் தொடர் எப்போதும் டாப் 10 இடங்களுக்குள் இருக்கும். மாரிமுத்து மறைவுக்குப் பிறகு, இத்தொடரின் விறுவிறுப்பு குறைந்து காணப்பட்டது. தற்போது மீண்டும் இத்தொடர் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இத்தொடரில் சத்யப்பிரியா, வேல ராமமூர்த்தி, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, கனிகா, மதுமிதா, விபுராமன் உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

விரைவில் மல்லி என்ற புதிய தொடர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. இத்தொடரில் பூர்ணிமா பாக்யராஜ், நளினி, மதன் பாப் உள்ளிட்ட பிரபலங்கள் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இத்தொடர் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளதால், எதிர்நீச்சல் தொடர் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரவு 9.30 ஒளிபரப்பாகி வரும் இனியா தொடர், 10.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக கூறப்படுகிறது.

புதிய நேர மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடைசி டி20: திலக் வர்மா, பாண்டியா அதிரடியால் தென்னாப்பிரிக்காவுக்கு 232 ரன்கள் இலக்கு

SIR: தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் | செய்திகள்: சில வரிகளில் | 19.12.25

சென்னை திரைப்பட விழா: பறந்து போ, டூரிஸ்ட் ஃபேமிலி படங்களுக்கு விருது!

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

SCROLL FOR NEXT