சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் பெயர் இதுதான்! டீசர் வெளியானது!
சிவகார்த்திகேயனின் 21-வது படத்தின் பெயர் மற்றும் டீசர் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயனின் 21-வது படத்தின் பெயர் மற்றும் டீசர் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம் ரூ.90 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியானது. பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்த இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமரிசனங்களைப் பெற்றுது.
இதைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் தன் 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். சாய் பல்லவி நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
Advertisement
Advertisement
இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் மற்றும் சென்னையில் நடைபெற்று வருகிறது. சிவகார்த்திகேயனின் 21-வது படத்துக்கு அமரன் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமரன் படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் முகுந்த் என்ற பாத்திரத்தில் ராணுவ அதிகாரியாக நடிக்கிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.