செய்திகள்

தக் லைஃப் படப்பிடிப்பில் த்ரிஷா!

DIN

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான 'நாயகன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைகிறது.

தக் லைஃப் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன.

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு செர்பியாவில் நடைபெறுகிறது. இதற்காக, இயக்குநர் மணிரத்னம் செர்பியா கிளம்பிச் சென்றுள்ளார்.

இந்நிலையில், நடிகை த்ரிஷா தக் லைஃப் படப்பிடிப்பில் தனக்கான காட்சிகளின் ’சீன் பேப்பர்’ புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இதனால், த்ரிஷா தக் லைஃப் படப்பிடிப்பில் இணைந்துள்ளது உறுதியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரை கொல்ல முயற்சி: 6 போ் கைது

அன்னையா் தின விழா

மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

கம்பம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் பதிவான 700 பத்திரங்கள் மறு கள ஆய்வு

திண்டுக்கல்லில் 89.97 சதவீதம் போ் தோ்ச்சி

SCROLL FOR NEXT