முகப்பு
செய்திகள்

ஹாலிவுட் தரத்தில் தமிழ்ப்படம்: அயலான் இயக்குநர் ரவிக்குமார்

அயலான் பட இயக்குநர் ரவிக்குமார் ஹாலிவுட் தரத்தில் தமிழ்ப் படத்தினை எடுக்க வேண்டுமெனக் கூறியுள்ளார். 

Updated On : 11 ஜனவரி 2024, 3:06 pm IST
பகிர்:

நடிகர் சிவகாா்த்திகேயன், ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் ரவிக்குமாா் இயக்கத்தில் ஏ.ஆா்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள அயலான் படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆா் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. 

இயக்குநர் ரவிக்குமாரின் ‘நேற்று இன்று நாளை’ படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பினை பெற்றது. அயலான் அவரது 2வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இப்படத்தில் அதிகளவிலான கிராபிக்ஸ் காட்சிகளும் 4,500-க்கும் மேற்பட்ட விஎஃப்எக்ஸ் காட்சிகளும் கொண்ட இந்திய சினிமாவின் முழு நீள லைவ்-ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளது. 

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் ரவிகுமார், “நாம் டைட்டானிக், அவதார் போன்ற சில படங்களை பார்க்க மட்டும்தான் முடிகிறது. மற்ற படங்களை இங்கு எடுக்க முடிகிறது. ஆனால் சில படங்களை பார்க்க முடிக்க முடிகிறது. அப்படியாக இருப்பதை எடுக்க வேண்டும். ஹாலிவுட் தரத்தில் தமிழ்ப் படங்களை எடுக்க வேண்டும். வெறுமனே தொழில்நுட்ப ரீதியாக மட்டுமில்லை கதை ரீதியாகவும் சொல்கிறேன். எனக்கு அந்த மாதிரி சயின்ஸ் பிக்‌ஷன் (அறிவியல் புனைவுகள்) படங்கள் மீதுதான் ஆர்வம் அதிகம். அதில் இருக்கும் சவால்கள் பிடிக்கும். மேலும் நான் இங்குள்ள மக்களுக்குதான் படம் எடுக்கிறேன். ஆகவே அனைவருக்கும் புரியும்படி எடுக்க நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.