கங்குலி பயோபிக்கில் ஆயுஷ்மான் குரானா!
பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலியின் பயோபிக்கில் ஹிந்தி நடிகர் ஆயுஷ்மான் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) முன்னாள் தலைவருமான செளரவ் கங்குலி இந்தியக் கிரிக்கெட்டில் முக்கியமான ஆளுமை. அவரது கேப்டன்சியில் இந்திய அணி சிறப்பாக விளையாடியிருக்கிறது.
கக்குலியின் பயோபிக்கில் ஆயுஷ்மான் குரானா நடிக்கவிருப்பதாக கடந்தாண்டில் இருந்து தகவல்கள் வெளியின நிலையில் தற்போது இது மேலும் வலுவடைந்துள்ளது.
இதையும் படிக்க: குண்டூர் காரம்: மகேஷ் பாபுவின் படங்களில் இதுதான் அதிகபட்ச முதல்நாள் வசூல்!
Advertisement
Advertisement
முதலில் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த இயக்குவதாக தகவல்கள் வெளியானது. தற்போது, விக்ரமாதித்ய மோத்வானி இயக்கவிருக்கிறார். எல்யூவி ஃபிலிம்ஸ் இந்தப் படத்தினை தயாரிக்கிறார்கள்.
இதையும் படிக்க: முதல் படமே வாழ்நாள் சாதனை: அன்பறிவ் சகோதரர்கள் நெகிழ்ச்சி!
இந்தப் படத்துக்காக ஆயுஷ்மான் குரானா பல மாதங்களாக கிரிக்கெட் பயிற்சி எடுத்து வருகிறார். படப்பிடிப்பு குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். படம் இந்தாண்டு இறுதியில் வெளிவருமென தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுமையான கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் ஹிந்தி நடிகர் ஆயுஷ்மான் குரானா. புதுமையான படங்கள் வசூலிலும் சாதனை படைப்பதால் ஆயுஷ்மான் குரானா இளஞர்களுக்கான அடையாளமாக திகழ்கிறார். இவரது பல படங்களை தமிழில் ரீமேக் செய்து நடித்துள்ளார்கள். அதில் நெஞ்சுக்கு நீதி, வீட்ல விசேஷம் ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.