முகப்பு
செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம்: போஸ்டர் வெளியீடு

இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி வரும் ராமம் ராகவம் திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

Updated On : 23 ஜனவரி 2024, 3:37 pm IST
பகிர்:

இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி வரும் ராமம் ராகவம் திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

நடிகர் சமுத்திரக்கனி கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சுப்பிரமணியபுரம், வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற இவர் அப்பா, தலைக்கூத்தல், ஆண் தேவதை உள்ளிட்ட பல்வேறு படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் படங்கள் நடித்து வருகிறார் சமுத்திரக்கனி. 

இந்நிலையில் தெலுங்கு நடிகர் தன்ராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனி ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்தத் திரைப்படம் அப்பா மகன் உறவை அடிப்படையாகக் கொண்ட கதைக்களமாக தயாராகி வருகிறது. 

Advertisement

இந்நிலையில் இந்தப் படத்தின் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஹைதராபாத், ராஜமந்திரி, சென்னை, மதுரை, தேனி, திண்டுக்கல் போன்ற இடங்களில் படப்பிடிப்பு  நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.