தெலுங்குப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்!
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பிரபல நடிகர் வெங்கடேஷுடன் தெலுங்குப் படத்தில் இணைந்துள்ளார்.
காக்கா முட்டை, ரம்மி, கனா, வடசென்னை உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். வடசென்னை வெற்றிக்குப் பிறகு பல்வேறு திரைப்படங்களில் நடித்துவருகிறார்.
அவர் நடிப்பில் உருவான ‘டிரைவர் ஜமுனா’, ஃபர்ஹானா, புலிமடா ஆகிய படங்கள் சுமாரான வெற்றியைப் பதிவு செய்தாலும் அவருக்கு பெயரைப் பெற்றுத் தந்தன.
தீராக் காதல் படத்தில் ஐஸ்வர்யாவின் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. சமீபத்தில், வெளியான டியர் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது.
Advertisement
Advertisement
சமீபத்தில் கன்னடத்தில் உத்தரகாண்டா என்கிற படத்தின் மூலம் அறிமுகமாகிறார். இதில், கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.
இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் இயக்குநர் அனில் ரவிபுடியுடன் 3ஆவது முறையாக இணைந்துள்ளார். இந்தப் படத்தினை ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் பூஜை இன்று (ஜூலை 3) காலை 11.16 மணிக்கு நடைபெற்றதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இந்தப் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளார். அற்புதமான மனைவியாக நடிக்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் நடிகை மீனாக்ஷி சௌத்ரி இதில் இணைந்துள்ளார். விரைவில் படப்பிடிப்பு துவங்குமென படக்குழு தெரிவித்துள்ளது.
கடைசியாக 2021இல் 2 தெலுங்கு படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது. வெங்கடேஷ் நடிப்பில் கடைசியாக வெளியான சைந்தவ் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.
நஷ், எஃப்2 ஆகிய படங்களில் அனில் ரவிபுடி இயக்கத்தில் வெங்கடேஷுடன் நடித்துள்ளதும் எஃப்2 திரைப்படம் வசுலில் கலக்கியதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.