முகப்பு
செய்திகள்

ரூ.1000 கோடியை நெருங்கும் கல்கி!

Updated On : 8 ஜூலை 2024, 3:01 pm IST
பகிர்:

கல்கி திரைப்படத்தின் வசூல் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் 'கல்கி 2898 ஏடி'. இப்படம் கடந்த ஜூன் 27-ல் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தில் கமல்ஹாசன், அமிதாப் பச்சன் ஆகியோர் நடித்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

Advertisement

Advertisement

மகாபாரதம், ஏஐ தொழில்நுட்பம், கல்கி அவதாரம் என புராணக் கதைகளுடன் எதிர்காலத்தை கற்பனை செய்து உருவான இப்படம் தொழில்நுட்ப ரீதியாக பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், உலகளவில் 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் ரூ.900 கோடியை தாண்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதனால், இப்படம் இன்னும் சில நாள்களில் ரூ.1000 கோடியைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.