முகப்பு
செய்திகள்

அந்தகன் டிரைலர்!

Updated On : 13 ஜூலை 2024, 4:05 pm IST
பகிர்:

அந்தகன் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

ஆயுஷ்மன் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் உருவான அந்தாதுன் திரைப்படம் ஹிந்தியில் 2018 அக்டோபர் மாதம் வெளியாகி, ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் பெற்றார்.

பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜேஜே பிரட்ரிக், அந்தாதுன் தமிழ் ரீமேக்கை இயக்குவதாக முதலில் அறிவிக்கப்பட்டது.  ஆனால், சில காரணங்களால் அவர் விலக, தியாகராஜனே இப்படத்தை இயக்கினார்.

Advertisement

Advertisement

அந்தகன் எனப் பெயரிடப்பட்ட இப்படத்தில் பிரசாந்த், சிம்ரன், ப்ரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ். ரவிகுமார், வனிதா விஜயகுமார் போன்றோர் நடித்துள்ளனர்.

2021இல் படப்பிடிப்பு தொடங்கி 2022இல் முடிக்கப்பட்டது. பல்வேறு பிரச்னைகளால் படம் வெளியாகமல் இருந்த நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் படம் வெளியாகுமென படக்குழு தெரிவித்திருந்தது. தற்போது, இதன் டிரைலர் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.