முகப்பு
செய்திகள்

இந்தியன் - 2: 20 நிமிட காட்சிகள் நீக்கம்!

Updated On : 13 ஜூலை 2024, 9:50 pm IST
பகிர்:

இந்தியன் இரண்டாம் பாகத்தின் நேர அளவு குறைக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கிய இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் நேற்று (ஜூலை 12) உலகம் முழுவதும் வெளியானது.

இந்தப் படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்.

Advertisement

Advertisement

லஞ்சம் மற்றும் ஊழலை மையமாகக் கொண்டு உருவான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. இதன் காரணமாக, சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்வினைகளைச் சந்தித்து வருகிறது.

இதனால், படத்தின் மீதான எதிர்மறை விமர்சனங்களைத் தவிர்க்க படக்குழு புதிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி, 3 மணி நேரமாக இருந்த இந்தியன் - 2 படத்திலிருந்து 20 நிமிட காட்சிகளை நீக்கியுள்ளனராம். தற்போது, 2.40 மணி நேரம் ஓடக்கூடிய படமாகவே இந்தியன் - 2 படத்தைக் காண முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.