10ஆவது ஆண்டில் வேலையில்லா பட்டதாரி..! தனுஷ் கூறியதென்ன?
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆகியுள்ளதற்கு தனுஷ் பதிவிட்டுள்ளார்.
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கிறார். அதற்கு முக்கிய காரணமான திரைப்படங்களுல் ஒன்று வேலையில்லா பட்டதாரி.
மரியான், நையாண்டி என சுமாரான படங்களே வெளியாகிக் கொண்டிருந்த நேரத்தில்தான் 2014ஆம் ஆண்டு வேலையில்லா பட்டதாரி படம் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்தது. இந்தப் படம் தனுஷ் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது எனலாம்.
இந்தப் படத்தை தனுஷ் தயாரிக்க பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கியிருந்தார். நடிகை அமலா பால் நடித்திருந்தார். அனிருத் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தன.
Advertisement
Advertisement
விஐபி வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமும் 2017ல் வெளியானது குறிப்பிடத்தக்கது. ஆனால் முதல் பாகம் அளவுக்கு வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில் விஐபி திரைப்படம் வெளியாகி 10 ஆவது ஆண்டுகள் ஆகின்றன. இதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த நடிகர் தனுஷ், “கல்ட் கிளாசிக்கின் 10ஆவது வருடம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் தனுஷ் தற்போது குபேரன் படத்தில் நடித்து வருகிறார். தனது 50ஆவது படமான ராயன் படத்தை தனுஷே இயக்கியுள்ளார். இந்தப் படம் வரும் ஜூலை 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள 'ராயன்' படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், நடிகை துஷாரா விஜயன், நடிகை அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இதன் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.