முகப்பு
செய்திகள்

விடாமுயற்சி: த்ரிஷாவுடன் இளமையான தோற்றத்தில் அஜித்!

நடிகர் அஜித், த்ரிஷாவுடன் இருக்கும் புகைப்படத்தினை விடாமுயற்சி படக்குழு வெளியிட்டுள்ளது.

Updated On : 19 ஜூலை 2024, 6:08 pm IST
விடாமுயற்சி பட போஸ்டர். த்ரிஷா, அஜித்.
பகிர்:

நடிகர் அஜித் அதிரடி சாகச காட்சிகளுக்கும் டூப் போடாமல் நடிக்கும் காட்சிகள் அஜர்பைஜான் நாட்டில் படமாக்கப்பட்டு வருகின்றன.

நடிகர் அஜித் குமார், இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது.

’மங்காத்தா’ படத்துக்குப் பின், நடிகர் அர்ஜுன் இத்திரைப்படத்தில் அஜித்குமாருடன் மீண்டும் இணைந்து நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் ஆரவ், ரெஜினா, சஞ்சய் தத், அருண் விஜய் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தினை எட்டியுள்ளது. தீபாவளிக்கு படத்தினை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.

Advertisement

Advertisement

கதாநாயகன் அஜித்குமார் மிக ஆபத்தான காட்சிகளுக்கும் டூப் போடாமல் நடித்து வருகிறார்.

தற்போது அஜித்துடன் த்ரிஷா இருக்கும் புகைப்படத்தினை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் அஜித் இளமையாக இருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.ட்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.