முகப்பு
செய்திகள்

கங்குவா படத்தில் ஆர்ஆர்ஆர் பட நடன இயக்குநர்!

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தின் பாடலுக்கு தேசிய விருது பெற்ற நடன இயக்குநர் நடனம் அமைத்துள்ளார்.

Updated On : 20 ஜூலை 2024, 4:05 pm IST
கங்குவா படத்தில் ஆர்ஆர்ஆர் பட நடன இயக்குநர்
பகிர்:

இயக்குநர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'கங்குவா'. இதில் சூர்யா நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானியும் வில்லனாக நட்டி (நடராஜ்) நடித்துள்ளனர்.

மேலும் அனிமல் படத்தில் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்த நடிகர் பாபி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கங்குவா போஸ்டர்.

மேலும் அனிமல் படத்தில் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்த நடிகர் பாபி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Advertisement

Advertisement

படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் சூர்யா நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு பாகங்களாகத் தயாராகும் இதன் முதல் பாகம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்நிலையில் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 23ஆம் தேதி முதல் பாடல் வெளியாகவுள்ளது.

இந்தப்பாடலுக்கு ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் அமைத்த நடன இயக்குநர் பிரேம் ரக்‌ஷித் ஒப்பந்தமாகியுள்ளார். நாட்டு நாட்டு பாடலுக்கு பிரேம் ரக்‌ஷித் தேசிய விருது வென்றார். ஆஸ்கர் விருது இந்தப் பாடலை இசையமைத்த எம்.எம்.கீரவாணிக்கு அளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments