லவ் இன்சூரன்ஸ் கம்பெனி எஸ்.ஜே. சூர்யா போஸ்டர்
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் நடிகர் எஸ்.ஜே. சூர்யாவுக்கான போஸ்டர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் விக்னேஷ் சிவன் ‘லவ் டுடே’ புகழ் பிரதீப் ரங்கநாதனை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்திற்கு, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (எல்ஐகே) எனப் பெயரிட்டுள்ளனர். பிரதீப்புக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர்.
Advertisement
Advertisement
இப்படப்பிடிப்பில் பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பாவாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் எஸ்.ஜே. சூர்யாவுக்கான முதல் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. முன்பு வெளியான முதல் தோற்ற போஸ்டரில், ’இதயம் செய்வதை எந்திரம் செய்யாது’ எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இதனால், இப்படம் சயின்ஸ் பிக்சனுடன் இணைந்த காதல் கதையாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.