விடாமுயற்சி அர்ஜுன் போஸ்டர்!
நடிகர் அர்ஜுனின் போஸ்டரை விடாமுயற்சி படக்குழு பகிர்ந்துள்ளது.
நடிகர் அஜித் குமார், இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.
’மங்காத்தா’ படத்துக்குப் பின், நடிகர் அர்ஜுன் இத்திரைப்படத்தில் அஜித்குமாருடன் மீண்டும் இணைந்து நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
இந்தப் படத்தில் ஆரவ், ரெஜினா, சஞ்சய் தத், முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தினை எட்டியுள்ளது. தீபாவளிக்கு படத்தினை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.
இந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் அஜர்பைஜான் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதைத் தொடர்ந்து நடிகர் அர்ஜுனின் புதிய போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ளது.
விடாமுயற்சியின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விரைவில் துவங்குகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.