டெட்பூல் வுல்வரின் உலக அளவில் ரூ. 4,000 கோடி வசூல்: இந்தியாவில் மட்டும் எவ்வளவு?
டெட்பூல் வுல்வரின் திரைப்படம் ஒரு வாரத்துக்குள் உலக அளவில் ரூ. 4,000 கோடி வசூலித்துள்ளது.
மார்வெல் காமிக்ஸின் மூலம் பிரபலமான டெட்பூல், வுல்வரின் நாயகர்கள் இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார்கள். இதற்கு ‘டெட்பூல் வுல்வரின்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. வுல்வரின் படத்து நாயகன் ஹக் ஜாக்மேனை திரையரங்குகளில் காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தார்கள். அது ஓரளவுக்கு நிறைவேறியது எனலாம்.
மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் 2007 முதல் படங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதன் முதல் படம் 2008இல் வெளியானது. இதுவரை 33 படங்கள் இந்த யுனிவர்ஸில் வெளியாகியுள்ளன.
11 படங்கள் தயாரிப்பு, படப்பிடிப்பு, வெளியீட்டுக்கு தயாராகுமென பல்வேறு கட்டங்களில் இருக்கின்றன.
Advertisement
Advertisement
டெட்பூல் வுல்வரின் திரைப்படம் கடந்த ஜூலை மாதம் 26ஆம் நாள் வெளியாகியது. இந்தப் படத்தினை ஷாவ்ன் லெவி இயக்கியுள்ளார். இதில் ரியான் ரெனால்ட், ஹக் ஜாக்மேன், எம்மா கோரின், மோரினா சில்வா ஆகியோர் நடித்துள்ளார்கள்.
இந்தப் படத்தில் இரட்டை அர்த்த வசனங்களும் தன்பாலின் ஈர்ப்பாளர்களை கிண்டல் செய்யும் வசனங்களும் சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன. இருந்தாலும் வசூலில் கலக்கி வருகிறது.
உலக அளவில் 500 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 4 ஆயிரம் கோடி ரூபாய்) வசூலித்துள்ளதாகவும் இந்தியாவில் ரூ.80 கோடியும் வசூலித்துள்ளதாக ஆங்கில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.