கல்கி டிரைலர் தேதி!
பிரபாஸ் நடிக்கும் கல்கி திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் திரைப்படம் 'கல்கி 2898 ஏடி'. இப்படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார்.
ரூ.600 கோடி பட்ஜெட்டில் இரண்டு பாகமாக உருவாகும் இப்படத்தில் நடிகர்கள் ராணா டக்குபதி, கமல்ஹாசன், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
முன்னதாக 'கல்கி 2898 ஏடி' படத்தில் நடிகர் பிரபாஸின் பெயர் பைரவா எனக் குறிப்பிட்டு படக்குழு போஸ்டரை வெளியிட்டதுடன் இப்படம் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
Advertisement
Advertisement
நடிகர் கமல்ஹாசன் இப்படத்தின் முதல் பாகத்தில் 20 நிமிடங்களும் இரண்டாம் பாகத்தில் 90 நிமிடங்களும் வருகிறாராம். இதனால், இப்படத்தின் வில்லன் கமல்ஹாசனாகத்தான் இருக்கும் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் ஜூன் 10 ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜூன் 27 ஆம் தேதி கல்கி திரைக்கு வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.