FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நடிகர் பிரபாஸின் ஃபௌசி வெளியீடு ஒத்திவைப்பு!

ஃபௌசி வெளியீடு ஒத்திவைக்கப்படுகிறது...

22 செப்டம்பர் 2026, 12:23 pm IST
பகிர்:

நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் ஃபௌசி திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஹனு ராகவபுடி (Hanu Raghavapudi) இயக்கத்தில் 'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிப்பில் உருவாகும் ஃபௌசி திரைப்படம் பிரம்மாண்டமான வரலாற்று பின்னணியிலான அதிரடி திரைப்படமாக திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருகிறது.

தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி- ஒய். ரவிசங்கர் மற்றும் பூஷன் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி சீரிஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்கும் பான் இந்திய திரைப்படமான 'ஃபௌசி' வருகிற டிசம்பர் 3 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இப்படம் கொஞ்சம் தாமதமாகத் திரைக்கு வருமென தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். இதனால், இப்படம் 2027 ஆம் ஆண்டு வெளியாகலாம் எனத் தெரிகிறது.

ஃபௌசி படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக இமான்வியும் முக்கிய கதாபாத்திரங்களில் அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, ஜெயப்பிரதா, பானு சந்தர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த திரைப்படத்திற்கு சுதீப் சட்டர்ஜி ஒளிப்பதிவு செய்ய விஷால் சந்திரசேகர் இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

The release of the film Fauzi, starring actor Prabhas, has been postponed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments