முகப்பு
செய்திகள்

மோகன்லால் 360: படப்பிடிப்பு விடியோ!

நடிகர் மோகன்லாலில் 360ஆவது படத்தின் படப்பிடிப்பு விடியோ வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

Updated On : 7 ஜூன் 2024, 6:11 pm IST
பகிர்:

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் மோகன்லால். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான  ‘நெரு’ திரைப்படம் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வசூலையும் குவித்தது.

இதற்கடுத்து வெளியான 'மலைக்கோட்டை வாலிபன்' எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

மோகன்லாலின் 360வது படத்தை 'ஆப்ரேஷன் ஜாவா', 'சவுதி வெள்ளக்கா' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் தருண் மூர்த்தி இயக்குகிறார்.

Advertisement

Advertisement

இப்படத்திற்கு தற்காலிகமாக எல்360 என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை ரஞ்சித் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் நடிகை ஷோபானா நடிக்கிறார். 1985இல் முதன்முதலாக மோகன்லால்- ஷோபனா இணைந்து அவிடத்தி போலே இவிடேயும் என்ற படத்தில் நடித்தார்கள். கடைசியாக 2004இல் மாம்பழக்காலம் என்ற படத்தில் இணைந்து நடித்தார்கள். தற்போது மீண்டும் 56ஆவது முறையாக இணைந்து நடிக்கிறார்கள்.

தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதன் விடியோவை படக்குழு நேற்று மாலை வெளியிட்டது.

விரைவில் படத்தலைப்பு அறிவிக்கப்படுமென இயக்குநர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.