FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

தக் லைஃப் படப்பிடிப்பில் விபத்து.. நடிகர் ஜோஜூ ஜார்ஜ்க்கு எலும்பு முறிவு!

Updated On : 13 ஜூன் 2024, 1:05 pm IST
பகிர்:

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான 'நாயகன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைகிறது. தக் லைஃப் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

தக் லைஃப் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சில சண்டைக்காட்சிகள் மட்டும் எடுக்கப்படவுள்ளன. தற்போது, பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஹெலிகாப்டரிலிருந்து நடிகர் ஜோஜூ ஜார்ஜ் குதிக்கும் காட்சி படமாக்கப்பட்டபோது அவர் தவறி கீழே விழுந்ததில் இடது பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக, அவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்கள் ஆலோசனையின்படி இன்னும் சில வாரங்கள் ஜோஜூ ஜார்ஜ் படப்பிடிப்பில் கலந்துகொள்ள மாட்டார் எனத் தகவல்.

Advertisement

Advertisement

ஜோஜூ ஜார்ஜ் தமிழில் ஜகமே தந்திரம், புத்தம் புது காலை விடியாதா, பஃபூன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments