முகப்பு
செய்திகள்

தந்தையாகும் இயக்குநர் விஜய்குமார் ராஜேந்திரன்!

நடிகரும் இயக்குநருமான விஜய்குமார் ராஜேந்திரன் தந்தையாகப் போவதாக அறிவித்துள்ளார்.

Updated On : 14 ஜூன் 2024, 12:56 pm IST
பகிர்:

நடிகரும் இயக்குநருமான விஜய்குமார் ராஜேந்திரன் தந்தையாகப் போவதாக அறிவித்துள்ளார்.

எரும சாணி யூடியூப்பின் மூலம் பிரபலமானவர் நடிகர் விஜய்குமார் விஜய்குமார். பின்னர் திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கே-13, நான் சிரித்தால், ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது படங்களில் நடித்துள்ளார்.

2022இல் நடிகர் அருள்நிதியை வைத்து டி பிளாக் படத்தினை இயக்கியுள்ளார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

Advertisement

Advertisement

இவருக்கும் ஃபேஷன் டிசைனர் நக்‌ஷத்திரா மூர்த்திக்கும் 2023இல் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் நக்‌ஷத்திரா மூர்த்தி தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்துள்ளார். ”எங்கள் வாழ்வில் புதியதாக ஒன்று இணைந்துள்ளது. சிறிய அற்புதம் வந்து கொண்டுள்ளது”எனப் பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் சினிமா இவர்களுக்கு பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments